நீள தலைமுடியோடு ஸ்டைலாக இருந்த டி ராஜேந்தரா இது?.. ஆளே அடையாளம் தெரியாம மாறிப் போயிட்டாரே!

By vinoth on பங்குனி 11, 2025

Spread the love

டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். அவரது அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. சிறந்த பேச்சுத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் மனதில் பட்டதை பொதுவெளியாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆதலால் சில நேரங்களில் அவர் பேசியது சர்ச்சையை உண்டு செய்துவிடும்.

ஒரு தலை ராகம் என்ற படம் மூலமாக அறிமுகம் ஆன டி ராஜேந்தர் அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.தொடக்கத்தில் திரைப்படங்களை இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தை மேற்கொண்ட  அவர் உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து தன் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

   

ரஜினி, கமல் போன்றோருக்கான மாஸ் ஆடியன்ஸ்கள் இருப்பது போலவே டி ஆருக்கும் தனியான ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக அவருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பெண் ரசிகைகள் இருந்தார்கள். அவரின் அந்த காலத்து கதைகள் பல இப்போது சீரியல்களாக எடுக்கப்பட்டு ஹிட்டடித்து வருகின்றன.

   

 

ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் டி அர். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு வயிற்றில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பினார். அதன் பின்னர் அவரது ஊடக வெளிச்சம் படாமல் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தலைமுடி எல்லாம் கொட்டி, தொப்பி அணிந்து உடல் இளைத்து தளர்வாகக் காணப்படும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வயது மூப்புக் காரணமாகவும் சமீபத்தைய உடல்நலக் குறைவு காரணமாகவும் அவருக்கு முடி கொட்டியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.