நான் பண்ண ஒரே தப்பு அந்த சமயத்துல கல்யாணம் பண்ணது தான்.. நடிகை ரேவதி ஓபன் டாக்..!

By Nanthini on மார்ச் 11, 2025

Spread the love

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகர் ரேவதி. தேவர்மகன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார் . திருமணம், குடும்பம் என செட்டிலா ஆன இவர் திரும்பவும் பல ஆண்டுகளுக்கு பின் தனுஷின் பவர் பாண்டி ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது 58 வயதாகும் இவர் சமீப காலமாகவே படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சலாம் வெங்கி என்ற ஹிந்தி படத்தை இயக்கினார்.

   

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கி வந்த நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஒன்றாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். அதன் பிறகு நடிகை ரேவதி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு தனக்கு ஐந்து வயதில்  ஒரு பெண் குழந்தை இருப்பதாக திடீரென கூறினார்.

   

Revathi Daughter Mahee: சுருட்டை முடி அழகில்... அம்மா ரேவதியையே பீட் பண்ணும் மகள் மகி! லேட்டஸ்ட் போட்டோஸ்! - Revathi Daughter Mahee Latest Photos Goes viral - Asianet News Tamil

 

இவர் திடீரென அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கமளித்த அவர், நான் டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்றேன். அதன் பிறகு நான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால் பலரும் இவரை நான் தத்து எடுத்த பிள்ளை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு நான் பெற்றெடுத்த குழந்தை தான் இவள் என்று வெளிப்படையாக கூறினார்.

இப்படியான நிலையில் ரேவதி அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சினிமாவில் நான் வருத்தம் கொள்ளும் அளவுக்கு எந்த விஷயமும் நடந்தது இல்லை. ஆனால் நான் கல்யாணம் அந்த வயதில் செய்திருக்கக் கூடாது. இன்னும் ஒரு நான்கு வருடங்கள் தாண்டி கல்யாணம் செய்து இருக்க வேண்டும். ஏனென்றால் அந்த சமயத்தில் தான் மௌனராகம் மற்றும் புன்னகை மன்னன் படங்கள் பண்ணியிருந்தேன்.

அது முடிந்ததும் கல்யாணம் செய்தேன் . இன்னும் கொஞ்சம் நிறைய நல்ல படங்கள் பண்ணதும் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாதா என்று நினைத்தேன். ஆனால் அது இப்போது தான் எனக்கு தோன்றுகிறது. 17 வயதில் சினிமாவுக்கு வந்த நான் 20 வயது வரை படம் நடித்தேன். பிறகு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடித்தேன். அதை மக்கள் எப்படியோ ஏற்றுக் கொண்டனர். இப்போது அனைவருக்கும் இருக்கும் தொழில் மீதான ஈடுபாடு குறித்து அப்போது எங்களுக்கு தெரியவில்லை என்று ரேவதி வெளிப்படையாக பேசியுள்ளார்.