Categories: சினிமா

கர்ண வள்ளல்கள் செய்த அடுத்த உதவி… மாணவ , மாணவிகளின் கல்விக்காக ராகவா லாரன்ஸ்- பாலா செய்த மிகப்பெரிய செயல்… வைரலாகும் வீடியோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது  வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

இதுமட்டுமின்றி ஏழை மக்களுக்காக தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதுவரை தன் சொந்த காசில் பல ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு  உணவு, குடிநீர் இல்லாமல் தவித்த போது ஓடோடி சென்று உதவினார்.

இப்படி ஏழை எளிய மக்களுக்கு ஓடி ஓடி தனது சொந்த காசை கொண்டு உதவி செய்து வரும் இவரை மக்களும், திரைபிரபலங்களும் மனதார பாராட்டி வருகின்றனர். இவரைப்போலவே நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் ஊனமுற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை பல வருடங்களாகவே செய்து வருகிறார். இது நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Bala ambulance donation

இந்நிலையில் விஜய் டிவி புகழ் பாலா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து கல்வி தேவைக்காக லேப்டாப் வாங்க முடியாமல் சிரமப்படும் மாணவ மாணவிகளுக்கு  லேப்டாப் வாங்கி தந்துள்ளனர்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசே மாணவ மாணவியருக்கு லேப்டாப் தந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொடுக்காததால் மாணவ மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

தங்களது கல்விக்கு லேப்டாப் தேவை என்றும் ஆனால் அதே நேரத்தில் லேப்டாப் வாங்கும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என்றும் பாலாவிடம் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்த நிலையில் சில மாணவர்களுக்கு ராகவா லாரன்ஸ் உதவியுடன் அவர் லேப்டாப் கடை வாங்கி கொடுத்து உள்ளார். இது குறித்த வீடியோவை பாலா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

54 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

59 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago