Categories: சினிமா

டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகு… இயக்குனர் அட்லி மனைவி பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்…

Spread the love

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ.

இவர்  இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.

தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் அட்லீ. அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்க போவதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக அட்லீ பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அட்லியும், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மீர் என பெயர் வைத்தனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் பிரியா அட்லீ. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago