சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கலக்கிய தனது தாய் குறித்து… மேடையில் கண்கலங்கிய பிரபல நடிகர்… 

By Begam on மாசி 20, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்திய நடிகராக வலம் வருப்பவர் நடிகர் ப்ரித்விராஜ். இவர் 2002ல் வெளியான ‘நந்தனம்’ என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உறுமி  உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

   

இவருக்கு 2006ல் சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதும் கிடைத்தது. இவர் இறுதியாக  பாகுபலி பிரபலம் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து ‘சலார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நடிகர் பிரித்விராஜின் குடும்பத்தில் அனைவரும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான்.

   

 

சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ் அவர்களின் தாய் நடிகை மல்லிகா சுகுமாரன் சினிமா துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்தார் . இவர் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்  திருவனந்தபுரத்தில் நடிகை மல்லிகா சுகுமாரன் சினிமா துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரித்விராஜ்  தனது தாய் மல்லிகா சுகுமாரன் குறித்து உணர்ச்சிவசமாக பேசிய வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

அதில் அவர், ‘நான் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான பெண் என் அம்மா  தான். என் தாயுடன் இணைந்து நடிப்பதில் பெருமையாக உள்ளது. அவர் தனக்கென திரையுலகில் தனி முத்திரையை பதித்துள்ளார். எப்போதும் எனது தந்தை இறப்பு என்னுடைய மனதில் இருக்கும். அப்பா இல்லாமல் அம்மா என்ன செய்வார்..? என்று என் மனதில் அவ்வப்பொழுது கேள்வி எழும். அதற்கு பதிலாகத்தான் நானும், என் அண்ணனும் அப்பா வடிவில் உங்கள் முன் இருக்கிறோம்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Shyam Kumar (@shyam_photography._)