90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கணவன் நாயகனாக வலம் வந்தவர் பிரஷாந்த். டாப் ஸ்டார் என அழைக்கப்படும் பிரசாந்த் சங்கர், மணிரத்தினம் என முன்னணி இயக்குனர்களோடு இணைந்து வேலை பார்த்துள்ளார். பிரசாந்த் ஹீரோவாக அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகராக மாறினார்.

சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது பிரசாந்த் சில சறுக்கல்களை சந்தித்தார். பல வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிரசாந்த் அந்தகன் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடித்தார். ஹிந்தியில் அந்தாதூன் என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அந்தகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் ஒரு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் அந்தகன் பட குழுவினர் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இன்று அந்தகன் படத்தின் சிங்கிள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்தகன் பட பாடலை விஜய்யும், பிரபுதேவாவும் இணைந்து ரிலீஸ் செய்தார்கள். அந்த பாடலை அனிருதும் விஜய் சேதுபதியும் இணைந்து பாடியுள்ளனர்.

படத்தின் வரிகள் வீடியோவில் பிரசாந்தி நடனம் அட்டகாசமாக இருக்கிறது என பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பிரசாந்த் கூறியதாவது, கேட்ட உடனே தளபதி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட ஓகே சொன்னார். பிரபுதேவா சார், இந்த பாட்டுக்கு கொரியாகிராப் பண்ண சாண்டி மாஸ்டர், இந்த பாட்டு பாடின அனிருத், விஜய் சேதுபதி ஆகியோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாருக்கும் பிடிக்கணும்னு எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணி இருக்கோம் என எமோஷனலாக பேசியுள்ளார்.

#image_title
