நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் குழந்தையை கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக பல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கின்றார். விஜய் டிவியில் ஒரு ஆங்கராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது பெரிய பட்ஜெட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் மிக பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கிறார். அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு, சிபிச் சக்கரவர்த்தி, சுதா கோங்குரா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் பயணிக்க இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி வருகின்றது.

அது மட்டும் இல்லாமல் தற்போது தான் சிவகார்த்திகேயனின் மனைவி தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தார். இந்த குழந்தைக்கு பவன் என்று பெயரிட்டு இருக்கின்றார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு குழந்தையோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருடைய குழந்தையோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அந்த குழந்தை வேறு யாருமில்லை. சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமாரின் மகன் என்று தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
