நடிகை சைத்ரா ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. தோழி வெளியட்ட போட்டோஸ் வைரல்..!!

By Priya Ram on ஜூலை 24, 2024

Spread the love

நடிகை சைத்ரா ரெட்டி கடந்த 2014-ஆம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான அவனும் மாத்தே சரவாணி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முதன் முதலில் தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் ப்ரியா பவானி சங்கர் நடித்தார். ப்ரியா பவானி சங்கர் சீரியலில் இருந்து விலகியதால் சைத்ரா ரெட்டி அவருக்கு பதிலாக நடித்தார்.

   

இதனையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார். இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. கயல் சீரியலில் சைத்ரா ரெட்டியின் போல்டான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியல் மட்டும் இல்லாமல் ரியாலிட்டி ஷோக்களிலும் சைத்ரா ரெட்டி கலந்து கொண்டுள்ளார். ரஞ்சிதமே நிகழ்ச்சியில் சைத்ரா ரெட்டி பங்கேற்றார்.

   

 

தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார். அங்கு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் சைத்ரா ரெட்டி. சமீபத்தில் தான் சைத்ரா தனக்கு பிடித்த பென்ஸ் காரை வாங்கினார்.

நேற்று சைத்ரா தனது 29 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் சைத்ரா ரெட்டியின் தோழியும் சின்னத்திரை நடிகையுமான நட்சத்திரா விஸ்வநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் சைத்ரா ரெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சைத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கோரி பொட்டோசுக்கு லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.