90’s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். முதலில் அவர் சண்டை கலைஞராகத்தான் இருந்தார். ஆனால் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றுத்தந்த கதாபாத்திரம் என்றால் அது நாட்டாமை படம்தான்.
அவர் நடித்த படங்களில் முக்கியமானவையாக வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், பெரிய மருது, நாட்டாமை, மாநகர காவல், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் முகவரி ஆகியவற்றை சொலல்லாம். தமிழைப் போலவே தெலுங்கு படங்களிலும் அவர் ஏராளமான வில்லன் வேடங்களில் நடித்தார். அவரின் உருவமும் மிரட்டலான கண்பார்வையும் அவரைப் பார்க்கும் யாவருக்குமே ஒரு சிறு பயத்தை உருவாக்கும் என்று சொன்னால் மிகையாகாது.
எல்லாக் கலைஞர்களுக்கும் நடப்பது போல இவருக்கும் ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் ஆனது. அதன் பின்னர் அவரின் ரி எண்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார். ஆனாலும் அதில் அவருக்கு கெட்ட பெயர் கிடைக்கும் விதமாகவே நடந்துகொண்டார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அவரின் உறவினர் ஒருவரே அவருக்கு ஸ்லோ பாய்சன் வைத்ததால்தான் அவர் உடல்நலம் கெட்டதாக சொல்லப்பட்டது.

#image_title
அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ஆகியோரின் உதவியால் அவர் சிகிச்சையில் தேறி இப்போது குணமாகி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் ஸ்டண்ட் கலைஞராக இருந்ததால் எல்லோரிடமும் மரியாதை இல்லாமல் திமிரா இருப்பேன். ஆனா நான் அப்படி யார் யார்கிட்ட எல்லாம் நடந்துகிட்டேனோ அவங்களே, எனக்கு உடம்பு சரியில்லாதப்ப உதவி செஞ்சாங்க. அப்போ எனக்கே வெக்கமாகிடுச்சு. அதுதான் என் வாழ்க்கையில் என் குணத்தை மாத்திய தருணம். இப்போது எல்லோரிடமும் அன்பாக இருக்க முயற்சிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.