அதைப்பற்றி எல்லாம் எதற்கு வெளியே சொல்ல வேண்டும்? இது தேவையற்ற வேலை – மலையாள நடிகர் நிவின்பாலி ஆவேசம்!

By Elango on மார்கழி 27, 2025

Spread the love

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த சர்வம் மாயா என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி துபாயில் நடந்தது. அதில் பங்கேற்ற நடிகர் நிவின் பாலியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது நடிகர் நிவின் பாலி கூறியதாவது, எதற்காக ஒரு படத்தில் லாபம் நஷ்டம் கணக்கை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்? அது தேவையில்லாத ஒன்று. இப்படி லாப நஷ்டம் கணக்குகளை வெளிப்படையாக தெரிவிப்பது தேவையற்றது.

இதற்கு முன்பு இதுபோல இல்லை. இப்படி அறிவித்தால் அது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கும் பாதிப்பு. புதிதாக படம் தயாரிக்கலாம் என்று வருபவர்களையும் தயங்கி நிறுத்தி வைத்து விடும். படத்தின் லாப நஷ்ட கணக்குகள் படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் அது அவர்களுடன் இருப்பதுதான் சினிமாவுக்கு நல்லது. எல்லா திரையுலகிலும் இது முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மலையாள சினிமா முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நடிகர் நிவின் பாலி கூறியிருக்கிறார்.