தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது 2026 சட்டமன்றத் தேர்தல் பல திருப்பங்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை என்பது பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. விஜய்க்கு கட்சி ஆரம்பித்தது முதலே மக்கள் மத்தியில் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது. விஜய்க்கும் அவருடைய ரசிகர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டாலும் இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார்.
இவர் கட்சியில் இணைந்த கையுடன் இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் விஜய் கட்சியில் சேர உள்ளனர். அதற்கான பணிகளை நானே மேற்கொள்வேன் என்று கூறி பரப்பரப்பை கிளப்பினார். இந்நிலையில்தான் அதிமுகவுடன் பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணி சேராத காரணத்தால் இபிஎஸ் மிகவும் அதிருப்தியில் இருந்ததாக அதிமுகவினர் கூறி வந்தனர். இதனிடையே ஜான் பாண்டியனும் தமமுக கட்சி அதிமுகவில் தொடருமா தொடராதா என்பதை பற்றி உறுதியாக சொல்ல முடியாது எனக்கூறி இபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தினார்.
இதுவே இவர் அதிமுகவில் இருந்து விலகுவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள இவருடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக இபிஎஸ் உடன் கருத்து வேறுபாட்டில் உள்ள ஜான்பாண்டியன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
