பார்க்க சின்ன வயசா இருக்காரே அவர ஏன் போடுறிங்கனு கேட்ட ரஜினி.. பின் அந்த நடிகரை அழைத்து பாராட்டி தள்ளிய தலைவர்..!

By Nanthini on பங்குனி 20, 2025

Spread the love

நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் மற்றும் வில்லன் நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். தமி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் நெப்போலியன். 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நெப்போலியன். பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்றார் நெப்போலியன். இதற்குப் பிறகு நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். 2000 கால கட்டத்திற்கு பிறகு கூட குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் நெப்போலியன்.

நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு நெப்போலியன் நிதி உதவி.. அடேங்கப்பா! இவ்வளவு  பெரிய தொகையா? | Actor Napoleon Donated One Crore Fund for Actors sangam  Building - Tamil Filmibeat

   

நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகன் தனுஷுக்கு தசை நார் வளர்ச்சி நோய் இருந்தது. இதனால் மிகுந்த சிரமப்பட்டு சிகிச்சை செய்து தற்போது அமெரிக்காவில் மகனுக்காக செட்டிலாகி இருக்கிறார் நெப்போலியன்.  சில மாதங்களுக்கு முன்பாக அவரது மகனுக்கு திருமணமும் செய்து வைத்தார் நெப்போலியன். இவரது மகனின் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

   

எஜமான்' படத்தால என் வாழ்க்கையே பாழா போயிருக்கும்! நல்லவேளை - பெருமூச்சு  விட்ட நெப்போலியன்

 

இந்நிலையில் நெப்போலியன் சமீபத்தில் அளித்த பேட்டியில், எஜமான் திரைப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னப்போ ரஜினிகாந்த் வேண்டாம் என்று சொல்லி உள்ளார். காரணம் என்னவென்றால் வயசுல ரொம்ப சின்ன பையனா இருக்கவங்கள என்கூட நடிக்க போட்டா எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாகும் என்று கேட்டுள்ளார். அப்போதுதான் இயக்குனர் எம்ஜிஆர் ஓட நம்பியார் வயசுல சின்னவர் தான் இருந்தாலும் அவருக்கு அப்பாவா நடிக்கலையா. அது மாதிரி நெப்போலியன் வயசுல சின்னவரா இருந்தாலும் உங்க கூட நடிக்கிறதுக்கு அவர்தான் கரெக்டாக இருப்பார் என்று கூறிய பிறகு தான் ரஜினி ஒப்புக்கொண்டாராம்.

கொடூர வில்லனாய் நெப்போலியன் கலக்கிய 5 படங்கள்.. வல்லவராயனாய் ரஜினியை  படாதபாடுப்படுத்திய எஜமான் படம் - Cinemapettai

எஜமான் படத்துல கூட இன்னும் கூட வயசுல நான் பெரியவன்டா என்ற வசனம் வரும். உண்மையிலேயே ரஜினிகாந்த் சார் கூட அந்த படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோசம். அதன் பிறகு தயக்கத்தோடு அந்த படத்தில் என்னுடன் நடித்த ரஜினியின் டப்பிங் எல்லாம் முடித்த பிறகு படத்தை பார்த்துட்டு ரொம்ப நல்லா நடிச்சு இருக்கீங்க உங்கள நான் வேண்டான்னு சொல்லிட்டேனே என்று வருத்தப்பட்டு என்ன ரொம்ப பாராட்டினாரு. அப்படிலாம் இல்ல சார் உங்க கூட நடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம் என்று அவர்கிட்ட நானும் கூறினேன் என நெப்போலியன் பேசியுள்ளார்.