தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான். தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார்.


நான் எங்க போனாலும் என்னோட அசிஸ்டன்ட் கூட கூட்டிட்டு தான் போவேன். ரூம்ல கூட அந்த பையன் என்கூட தான் இருப்பான், ஏன்னா என்னோட பாதுகாப்புக்காக தான் அவன் கூட சேர்ந்து நிறைய ஹோட்டலில் இருந்து தப்பித்து வந்து இருக்கேன். தமிழ் சினிமாவுல சில நடிகர்கள் என அப்ரோச் பண்ணும் போது நான் வேண்டாம் என்று சொல்லிட்டா ஓகே பிரண்ட்ஸா இருந்துக்கலாம் என்று சொல்லிட்டு போயிருவாங்.க ஆனா பெரும்பாலான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தான் தொந்தரவு பண்ணுவாங்க.

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையும் அவங்க கிட்ட தான் அதிகமாக இருக்கும். மலையாள சினிமாவை பொறுத்தவரையில் 45 வயசுக்கு மேற்பட்ட நடிகர்கள் தான் வருவாங்க. அதுல சில நடிகர்கள் பல முறை என்னோட காலை பிடித்து கெஞ்சி இருக்காங்க ஏதாவது பொய் சொல்லி தப்பிச்சு வரலாம் என்று தான் நானும் முயற்சி பண்ணுவேன். நடிகர்களுடன் கம்பேர் பண்ணும் போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தான் அதிகமாக தொந்தரவு கொடுப்பாங்க என்று சோனா சமீபத்திய பேட்டி பேசியுள்ளார்.
