20 ஆண்டுகளாக வாழ்ந்த வீட்டை விட்டு காலி செய்து… 3 கோடி கொடுத்து வாடகை வீட்டுக்கு செல்லும் ஷாருக்கான்.. காரணம் இதுதானா..?

By Nanthini on பங்குனி 20, 2025

Spread the love

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் ஷாருக்கான். மும்பையில் வசித்து வரும் இவருடைய பங்களாவின் பெயர் மன்னத் பங்களா. பந்த்ரா கடற்கரை பகுதியில் இருக்கும் 27000 சதுர அடியில் இந்த பங்களா 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பங்களா ஷாருக்கானின் கனவு இல்லமாக உள்ளது. இதனை வாங்கிய பிறகு முதல் முறையாக ஷாருகான் தனது குடும்பத்தோடு வீட்டை காலி செய்ய உள்ளார்.

Know about shahrukh khan mannat house price,actor ones bought this bungalow  for 13 crores, today it is worth rs 350 crores | कभी 13 करोड़ में खरीदा था  Shahrukh Khan ने बंगला,

   

இந்த பங்களாவில் புதுப்பிப்பு மற்றும் விரிவு படுத்தி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கூடுதலாக இரண்டு மாடியில் கட்டப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டை காலி செய்து விட்டு தற்காலிகமாக வேறு வீட்டில் ஷாருக்கான் குடியேற உள்ளார். அந்த பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிக்கில்லில் இருக்கும் பூஜா காசா என்ற ஆடம்பர அடுக்குமாடி கட்டிடத்தில் வாடகைக்கு வாங்கி இருக்கும் வீட்டில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு ஷாருக்கான் குடியேறுகிறார். பூஜா பாஷாவில் இரட்டை மாடிகளை கொண்ட இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளார்.

   

 

இக்கட்டிடம் தயாரிப்பாளர் வாசு பக்னானி மற்றும் அவரது மகள் தீப்ஷிகா, மகனும், நடிகருமான ஜாக்கி பக்னானி ஆகியோருக்குச் சொந்தமானது ஆகும். 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 36 மாதங்களுக்கு வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஸ்டாம்ப் டியூட்டியாக ரூ.2.22 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகள் தங்க ரூ. 8.7 கோடி செலவாகும். செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ. 68.97 லட்சம் கொடுத்திருக்கிறாராம் ஷாருக்கான். ஷாருக்கானின் மன்னத்தின் பாதி அளவு கூட இல்லை பூஜா காசா அபார்ட்மென்ட். மன்னத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பூஜா காசா அபார்ட்மென்ட் இருக்கிறது.