Categories: சினிமா

“சார் நான் கேக்குற சம்பளத்த நீங்க கொடுக்குற ஒரு நாள் சீக்கிரமே வரும்”… AVM நிறுவனத்திடம் சவால்விட்டு சாதித்துக் காட்டிய நாகேஷ்

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

ஆனால் அவரின் தொடக்கக் காலம் மிகுந்த போராட்டம் உடையதாகதான் இருந்தார். படங்களில் வேடம் கிடைப்பதற்காக அவர் பல நாட்கள் போராடினார். அப்படியே சிறுசிறு வேடங்கள் கிடைத்தாலும் அவருக்கு சரியான சம்பளம் கிடைக்காது. இந்த பிரச்சனை அவர் ஓரளவுக்கு முன்னணி நடிகராக வளர்ந்த பின்னரும் தொடர்ந்துள்ளது.

நானும் ஒரு பெண் என்ற படத்தில் அவரை நடிக்க வைக்க ஏவிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அப்போது அந்த படத்துக்காக நாகேஷ் 10000 ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் ஏவிஎம் நிறுவனமோ 5000 ரூபாய்தான் தருவேன் என சொல்லியுள்ளது. பேரம் பேசி கடைசியில் 6000 ரூபாய்க்கு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் நாகேஷ்.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஏவிஎம் சரவணனை அழைத்து “சார், நான் சம்பள விஷயத்தில் இப்படி பேரம் பேசுகிறேனே என நினைக்காதீர்கள். கூடிய சீக்கிரமே நான் கேட்கும் சம்பளத்தை பேரம் பேசாமல் நீங்கள் கொடுக்கக் கூடிய காலம் வரும்” என சவால் விட்டுள்ளார். அவர் வார்த்தை பலித்து சில ஆண்டுகளிலேயே சர்வர் சுந்தரம் படத்தில் கதாநாயகனாக நடிக்க நாகேஷை அணுகியது ஏவிஎம் நிறுவனம். அப்போது அவர் கேட்ட சம்பளத்தை அப்படியே பேரம் பேசாமல் கொடுத்துள்ளனர்.

vinoth

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

4 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

4 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

5 மணத்தியாலங்கள் ago