#image_title
தமிழ் சினிமாவில் நகைச்சுவை அம்சத்தோடு வரும் படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை முதல் ஆண்பாவம், உள்ளத்தை அள்ளித்தா என இந்த பட்டியல் நீளும். இப்படி 1985 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ஆண்பாவம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.
கன்னிராசி மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாண்டிராஜனின் இரண்டாவது படம் ஆண்பாவம். பாண்டியனோடு அவரும் ஒரு கதாநாயகனாக அந்த படத்தில் நடித்திருந்தார். அண்ணன் தம்பியான பெரிய பாண்டி, சின்ன பாண்டி ஆகியவர்களின் குறும்புத்தனமான வாழ்க்கையில் திருமணம் குறுக்கிடும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பின்னான முடிவுகளுமே இந்த படத்தின் கதை.
#aanpaavam
இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார் பாண்டியராஜன். ஆனால் பாண்டியனுக்கும் சீதாவுக்கும் இடையில் ஒரு அழகான உணர்ச்சிப் பூர்வமான காதல் கதையும் இடம்பெற்றிருக்கும். இந்த படம் நடிகை சீதாவுக்கு அறிமுகப்படம்.
அதனால் சினிமாவின் சூட்சமங்கள் புரியாமல் அவர் சில இடங்களில் சொதப்பியுள்ளார். காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கும்போது தேவையில்லாமல் கேமராவைப் பார்த்து காட்சியைக் கெடுத்துவிடுவாராம். இது சம்மந்தமாக இயக்குனர் பாண்டியராஜன் சீதாவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவரால் அந்த தவறை திருத்திக் கொள்ள முடியவில்லையாம்.
இதே போல ஒரு தடவை அவர் கேமராவை பார்த்துவிட, கோபத்தில் பாண்டியராஜன் கையை ஓங்கிவிட்டாராம். அப்போது பார்த்து உட்கார்ந்திருந்த சீதா எழுந்துவிட, அவர் மேல் பாண்டியராஜனின் கை பட்டுவிட்டதாம். இதனால் அவர் தன்னை அடித்துவிட்டார் என்று படப்பிடிப்பிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார் சீதா. அதன்பின் அவரைச் சமாதானம் செய்த பாண்டியராஜன் மீண்டும் அந்தக் காட்சியில் நடிக்க வைத்து பின்னர் படமாக்கியுள்ளார்.
ஆனால் படம் ரிலீஸான பின்னர் சீதாவின் நடிப்புக்கு பரவலாக பாராட்டு கிடைத்துள்ளது. தன்னுடைய நடிப்பைப் பார்த்து அவரே ஆச்சர்யப்பட்டு இயக்குனர் பாண்டியராஜன் காலில் விழுந்து வணங்கினாராம்.
இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைக்கிறது. ஒரு பெண் தனது கணவர்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…