Categories: சினிமா

அட போஸ்டரே மாஸா இருக்கே… படம் வந்துருந்தா? ரஜினி ஏவிம் கூட்டணியில் உருவான ‘ஜில்லா கலெக்டர்’ ட்ராப் ஆனது ஏன் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ரஜினிகாந்த் பாலச்சந்தரால் அறிமுகமான போது வில்லன் நடிகராகவே பல படங்களில் நடிக்கவைக்கப்பட்டார். அவரை கதாநாயகன் ஆக்கியது கலைஞானம் அவர்கள்தான். பைரவி படத்தில் அவர ஹீரோவாக்கினார். அதன் பின்னர் முள்ளும் மலரும் வந்து அவரை திறமையான நடிகராக அடையாளம் காட்டியது.

அதன் பின்னர் முரட்டுக் காளை திரைப்படம் வெளியாகி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்தார. அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது எஸ் பி முத்துராமனும், ராஜசேகரும்தான். இவர்கள் இருவரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த ரஜினி ஹிட் படங்களாகக் கொடுத்தார்.

#image_title

இந்த கமர்ஷியல் வெற்றிகளால் ரஜினி அதே பாதையில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் ரஜினி நடிக்கவே இல்லை. 90 களில் ரஜினியின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. அப்போது சில ஹிட்ஸ்களைக் கொடுத்து வளர்ந்து வரும் இயக்குனராக இருந்து ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஏவிஎம் நிறுவனத்துக்காக ‘ஜில்லா கலெக்டர்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அந்த படத்தின் போட்டோஷூட் நடத்தப்பட்டு போஸ்டரும் வெளியானது. ரஜினி வழக்கமாக தன்னுடைய ஸ்டைலில் சிகரெட் பிடித்தவாறு நிற்கும் அந்த போஸ்டர் ரசிகர்களை பெரிதாகக் கவர்ந்தது. ஆனால் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த பின்னர் அந்த படம் நிறுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. ரஜினியின் கேரியரில் ஷூட்டிங் தொடங்கி நிறுத்தப்பட்ட வெகுசில படங்களில் ஜில்லா கலெக்டர் திரைப்படமும் ஒன்று.

இந்த படம் ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்து இயக்குனர் ஆர் வி உதயகுமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். படத்தின் பட்ஜெட் அதிகமாக தேவைப்பட்தால் அப்போதைய சூழலில் அந்த படத்தை மேற்கொண்டு எடுக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். ஆனால் அப்போதைய பத்திரிக்கை செய்திகளில் கதையில் ரஜினிக்கும் , ஏவிஎம் தரப்புக்கும் திருப்தி இல்லாததால் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

vinoth

Recent Posts

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

6 minutes ago

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

10 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

13 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

14 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

27 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

28 minutes ago