CINEMA
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. அவதூறா பேசாதீங்க.. நடிகர் மோகன்லால் ஓபன் டாக்..!!
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அடுத்தது தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதில் இருந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் பிரபல நடிகரான மோகன்லால் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஹயாத் ரெஜன்சி என்ற கிரிக்கெட் லீக் தொடங்கும் இடத்திலிருந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, எல்லா பிரச்சினைகளுக்கும் மலையாள நடிகர் சங்கமான அம்மா மீது குறை சொல்லவே கூடாது.
அதுபோல நானும் எந்த பவர் குரூப்பிலும் இல்லை. நான் மலையாள திரையுலகில் 47 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன். மலையாள நடிகர் சங்கமான அம்மா என்பது வர்த்தக யூனியன் கிடையாது. இது ஒரு குடும்பம். சங்கம் பற்றி அவதூறாக பேசாதீர்கள். மற்ற திரையுலகை காட்டிலும் மலையாள திரையுலகம் சிறப்பாகவே இருக்கிறது.
கடந்த வாரம் முழுக்க எனது மனைவியின் அறுவை சிகிச்சை மற்றும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். இதனால் ஹேமா கமிட்டி குறித்து விளக்கம் அளிக்க முடியவில்லை. தயாரிப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இருக்கும் பட்சத்தில் எனக்கு தெரிந்த அனைத்தையும் ஹேமா கமிட்டிக்கு கூறியுள்ளேன். தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்க வேண்டும். அதற்கு நானும் முழு ஒத்துழைப்பு தருவதற்கு தயாராக இருக்கிறேன். நான் எந்த பவர் குரூப்பில் இல்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் ஹேமா கமிட்டியின் அருகே முழுவதுமாக வெளியாகவில்லை. அதில் நடிகர்களின் பெயர்கள் இருப்பதால் தான் பகுதியாக வெளியானதா? என கேள்வி எழுப்பப்பட்டதற்கு மோகன்லால் எனக்கு தெரியாது என கூறினார். அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டபோது எனக்கு தெரியாதுன்னா தெரியாது என கூறிவிட்டார். மேலும் பல்வேறு கேள்விகளுக்கு மோகன்லால் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது எதையும் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.