Connect with us

GOAT முதல் படைத்தலைவன் வரை.. இந்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ..!!

CINEMA

GOAT முதல் படைத்தலைவன் வரை.. இந்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ..!!

ஆகஸ்ட் மாதம் தங்கலான், அந்தகன், டிமான்டி காலனி 2, வாழை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
டி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் டி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் கோட் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

கோழிப்பண்ணை செல்லதுரை:
சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடிப்பில் கோழிப்பண்ணை செல்லதுரை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, சகாய பிரகிடா, குட்டி புலி தினேஷ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

   

 

லப்பர் பந்து:
ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ரப்பர் பந்து திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ரப்பர் பந்து படத்தை தயாரிக்கிறது கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் தான் ரப்பர் பந்து படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படமும் வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இது மட்டுமில்லாமல் சதீஷ் ஆக்சன் ஹீரோவாக நடித்த சட்டம் என் கையில், சசிகுமார் நடித்த நந்தன், காளி வெங்கட் நடித்த தோனிமா ஆகிய படங்களும் செப்டம்பர் 20-ஆம் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது.

மெய்யழகன்:
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் பிரேம் குமார். இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் மெய்யழகன் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ் கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படைத்தலைவன்:
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அன்பு இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் தான் ரிலீஸ் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஜீவா பிரியா பவானி சங்கர் நடிப்பில் பிளாக் என்ற படமும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படை தலைவனாக மாறிய சண்முக பாண்டியன்.. ட்ரெண்டாகும் வீடியோ | Tamil cinema  padaithalaivan movie update

author avatar
Priya Ram

More in CINEMA

To Top