Categories: சினிமா

உதவ சென்றபோது தூங்கிக் கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணன்.. எம்ஜிஆர் செய்த நெகிழ வைக்கும் செயல்..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தமிழ்நாட்டின் சிறந்த தலைவராகவும் இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர். குடும்ப வறுமையின் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னாளில் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.

தன்னை வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல்.  தன் வாழ்நாளில் எம்ஜிஆர் செய்த உதவிகள் ஏராளம். இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரிய கூடாது என சொல்வார்கள்.
அதுபோல எம்ஜிஆர் தன்னை யார் என காட்டிக் கொள்ளாமலேயே பலருக்கும் பலவிதமான உதவிகளை செய்துள்ளார். என் எஸ் கிருஷ்ணன் எம்ஜிஆருக்கு குரு போன்றவர். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மிகவும் வறுமையில் இருந்தார். அந்த சமயத்தில் உடல்நிலை சரியில்லாமல் என் எஸ் கிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்திக்க எம்ஜிஆர் நேரில் சென்று இருந்தார்.
அப்போது என் எஸ் கிருஷ்ணன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தான் அவருக்காக கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற பணத்தை அவர் தலையணைக்கு அடியில் வைத்து சென்றார். அதன் பிறகு கண் விழித்த என் எஸ் கிருஷ்ணன் தலையணைக்கு அடியில் இருந்த பணத்தைப் பார்த்ததும் எம்ஜிஆர் வந்து சென்றாரா என்று கேட்டார். நடந்ததை வைத்து யார் வந்து சென்றார் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது எம்ஜிஆரின் வள்ளல் குணம். தமிழ் சினிமாவிலேயே பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்த பெருமை எம்ஜிஆருக்கே சேரும்.
Nanthini

Recent Posts

ஆட்சியை தூக்கி பிடிச்சுட்டு…. அடிமடியிலேயே கை வைக்கும் கம்யூனிஸ்ட்கள்…. விஜய் கொடுத்த ‘செக்’….. இடைத்தேர்தலில் செம டுவிஸ்ட்….!

தமிழக அரசியலில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துக்கொண்டே, இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு…

4 minutes ago

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…! கார் விபத்தில் சிக்கி 4 பேர் ரத்த வெள்ளத்தில் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்..!!

ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலமாகுலா எல்லைப் பகுதியில், விநாயகர் சிலை விசர்ஜன விழாவை முடித்துவிட்டு மெட்டுகட்டா தண்டாவிலிருந்து ஷம்ஷாபாத் நோக்கிச்…

9 minutes ago

CM விஜய்யின் மனைவியா த்ரிஷா?…. “தமிழ்நாட்டை கேவலப்படுத்தாதீங்க”…. அதிமுக மாஜி பகீர்….. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பொதுநிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வருகைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்…

9 minutes ago

“லிஃப்ட்டிற்குள் செக்யூரிட்டி கார்டுக்கு பளார்…” அதிகார தோரணையில் அராஜகம் செய்த நபர்…. பண்றது எல்லாமே தப்பு…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…

19 minutes ago

“5 வயது மகளை கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த தந்தை…” 3 பக்க கடிதம் எழுதி வைத்து… வீட்டுக்கு வந்து பதறிய தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…

30 minutes ago

“சமைப்பதில் தகராறு…” மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவன்… தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதல் பரபரப்பு… பகீர் சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…

35 minutes ago