தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தமிழ்நாட்டின் சிறந்த தலைவராகவும் இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர். குடும்ப வறுமையின் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னாளில் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.

தன்னை வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். தன் வாழ்நாளில் எம்ஜிஆர் செய்த உதவிகள் ஏராளம். இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரிய கூடாது என சொல்வார்கள்.

அதுபோல எம்ஜிஆர் தன்னை யார் என காட்டிக் கொள்ளாமலேயே பலருக்கும் பலவிதமான உதவிகளை செய்துள்ளார். என் எஸ் கிருஷ்ணன் எம்ஜிஆருக்கு குரு போன்றவர். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மிகவும் வறுமையில் இருந்தார். அந்த சமயத்தில் உடல்நிலை சரியில்லாமல் என் எஸ் கிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்திக்க எம்ஜிஆர் நேரில் சென்று இருந்தார்.
/indian-express-tamil/media/media_files/XZF2qJkwXGLsIsXsQoQF.jpg)
அப்போது என் எஸ் கிருஷ்ணன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தான் அவருக்காக கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற பணத்தை அவர் தலையணைக்கு அடியில் வைத்து சென்றார். அதன் பிறகு கண் விழித்த என் எஸ் கிருஷ்ணன் தலையணைக்கு அடியில் இருந்த பணத்தைப் பார்த்ததும் எம்ஜிஆர் வந்து சென்றாரா என்று கேட்டார். நடந்ததை வைத்து யார் வந்து சென்றார் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது எம்ஜிஆரின் வள்ளல் குணம். தமிழ் சினிமாவிலேயே பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்த பெருமை எம்ஜிஆருக்கே சேரும்.
