தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்சன் ஹீரோவாக கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த். நடிப்பை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்.இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இவருடைய இடத்தை எந்த நடிகராலும் இதுவரை முடியவில்லை.
இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது. இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டவர். கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இதைத்தொடர்ந்து அவர் தே மு தி க பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நம் கேப்டன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த மண்ணுலகை விட்டு அவரது உயிர் பிரிந்து விட்டது. தற்பொழுது இந்த செய்தி அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கல்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மன்சூர் அலி கான் மட்டும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் காலருகே 10 மணி நேரத்துக்கும் மேலாக நகராமல் உட்கார்ந்தே இருந்தார். இதன்மூலம் அவர்களிருவருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதையும், நடிகர் மன்சூர் அலி கான் விஜயகாந்தின் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பதும் நமக்கு புரிகிறது.