Connect with us

அதைப் பார்த்ததுமே ரஜினி படத்துல நடிக்க ரஞ்சித் அண்ணா கூப்பிட்டாரு.. நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்..!

CINEMA

அதைப் பார்த்ததுமே ரஜினி படத்துல நடிக்க ரஞ்சித் அண்ணா கூப்பிட்டாரு.. நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்..!

தமிழ் சினிமாவில் குட் நைட் திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர்தான் நடிகர் மணிகண்டன். இயக்குனர் கனவுடன் கோலிவுட்டை வலம் வந்து கொண்டிருந்த அவருக்கு கிடைத்தது என்னவோ நடிகர் வாய்ப்புதான். அதனை சிறப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டார். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் சிறப்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளால் குட் நைட் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அவரின் நடிப்பில் லவ்வர் திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

   

குட் நைட் திரைப்படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வருகின்றார். மேலும் இயக்குனர் கனவையும் விட்டுவிடாமல் விஜய் சேதுபதிக்காக ஒரு ஸ்கிரிப்ட் மணிகண்டன் ரெடி செய்து வருகின்றார். இவர் ஹீரோ ஆவதற்கு முன்பு காமெடியனாக, மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்து விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி அதன் பிறகு பல திரைப்படங்களில் சிறிய சிறிய ரோல்களில் நடித்து ஹீரோவாக வளர்ந்தார். இவர் மெட்ராஸ், கபாலி மற்றும் காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

 

இந்த நிலையில் காலா திரைப்படத்தில் தன்னை எப்படி தேர்வு செய்தனர் என்பது குறித்து சில தகவல்களை அவர் பகிர்ந்து உள்ளார். அதாவது மணிகண்டன் முதலில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வந்துள்ளார். அதில் சில வீடியோக்களை அவர் போஸ்ட் செய்துள்ளார். அந்த வீடியோக்களை பார்த்துவிட்டு தான் ரஞ்சித் தன்னை காலா படத்தில் நடிக்க தேர்வு செய்ததாக மணிகண்டன் கூறியுள்ளார். யூடியூபில் தனது வீடியோவை பார்த்துவிட்டு உடனே போன் செய்த பா. ரஞ்சித், நன்றாக நடித்திருப்பதாக கூறி காலா படத்தின் ஆடிஷனுக்காக கூப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் காலா படத்தில் நடித்ததாக கூறியுள்ளார்.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top