Connect with us

எந்த ஒரு முதலீடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட ஆப்… இன்று கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் Zomato உருவானது எப்படி தெரியுமா…?

Startup

எந்த ஒரு முதலீடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட ஆப்… இன்று கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் Zomato உருவானது எப்படி தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் உலகம் பரபரப்பாகிவிட்டது. எதிலுமே மக்கள் பாஸ்ட்டாக இருக்க தான் விரும்புகிறார்கள். எதையுமே சட்டென்று நம் கையில் கிடைத்து விடாதா என்று தேடுகிறார்கள். அதுவும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த நிலைமை இன்னும் தீவிரமடைந்து விட்டது. வீட்டிலேயே எல்லா பொருட்களையும் ஆன்லைன் ஸ்டோர்களில் ஆர்டர் செய்து ஆர்டர் செய்து அதிலேயே மக்கள் பழகி விட்டனர். இதற்கு உணவும் விதிவிலக்கல்ல. வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்து அதை கையில் பெறுவது இன்றைய பெரும்பாலான மக்கள் விரும்பும் செயலாகும். அப்படி இந்த ஐடியாவை வியாபாரம் ஆக்கி சாதித்த Zomato நிறுவனத்தை பற்றி இனி காண்போம்.

   

Zomatoவின் உரிமையாளர் தீபிந்தர் கோயல் ஆவார். இவர் பஞ்சாபில் உள்ள சிறிய ஊரில் பிறந்தார். கடினமாக படித்து 2005இல் ஐஐடி டெல்லியில் தனது பட்டப் படிப்பை முடித்தார் தீபிந்தர் கோயல். 2006 இல் பெயின் அண்ட் கம்பெனியில் அசோசியேட் ஆலோசராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

   

ஒரு நாள் மதிய உணவு நேரத்தில் உணவை ஆர்டர் செய்ய மெனுவை பார்க்க நிறைய ஊழியர்கள் வரிசையில் நிற்பதை பார்த்த அவர் அந்த மெனுக்காடுகளை ஸ்கேன் செய்து கம்பெனி போர்ட்டலில் ஏன் போடக்கூடாது என்று ஐடியா அவருக்கு தோன்றியுள்ளது. இதனால் நேரங்கள் சேமிக்கப்படும் என்பதை கண்டுபிடித்தார். இந்த ஐடியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் போது இது வெற்றிகரமாகவே அமைந்தது.

 

அப்படித்தான் 2008 ஆம் ஆண்டு தீபேந்தர் தனது நண்பர் பங்கஜுடன் சேர்ந்து foodiebay.com என்பதை தொடங்கினார். இந்த ஆப்பில் டெல்லியில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து முடிந்த அளவு மெனுக்களை சேகரித்து அவற்றை foodiebay இல் பதிவேற்றினார். கூடுதலாக மெனுக்கள் உடன் உணவகங்களின் தொலைபேசி மற்றும் இணைய முகவரிகள் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அவர்களுக்கு விளம்பரங்கள் வந்ததால் அதன் மூலம் வருமானம் கிடைத்தது. அதிக பயனர்கள் இந்த ஆப்பை பயன்படுத்தியதனால் டிராபிக் ஏற்பட்டதனால் foodiebay சேவையை அது பெரும் அளவு பாதித்தது.

தீபேந்தர் இந்த foodiebay.com ஆப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நகரங்களில் உள்ள அனைத்து உணவுகளில் உள்ள விவரங்களை பெறுவதற்கு அதிகம் பயணித்தார் தீபேந்தர். ஒரு இரண்டு வருடங்கள் எந்த முதலீடுமே இல்லாமல் இந்த இணையதளத்தை நடத்தி வந்தார் தீபேந்தர். ஆனால் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லும் போது அவர்களுக்கு நிதி தேவைப்பட்டது.

இனி மெனுவில் இருக்கும் உணவுகளை யார் யார் ஆர்டர் செய்கிறார்களோ அவர்கள் இடத்திற்கே கொண்டு டெலிவரி செய்யும் ஐடியாவை வைத்துக்கொண்டு தீபேந்தர் முதலீட்டாளர்களை தேடி கண்டுபிடித்தார். அதன்படி 2018 ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை இவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தது Info Edge India.

பெருமளவு முதலீடு கிடைத்ததும் இது அவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. 2011 ஆம் ஆண்டு foodiebay.com என்ற பெயரை Zomato என்று மாற்றினர் திபேந்தர். அசோசியேட் கன்சல்ட்டாக இருந்த வேலையை விட்டுவிட்டு முழு கவனத்தையும் Zomato பக்கம் திருப்பி அதன் வளர்ச்சிக்கு உழைப்பதற்கு முடிவு செய்தார். Zomato என்று புது செயலியை உருவாக்கினர் திபேந்தர் மற்றும் பங்கஜ். அதில் உணவகங்களின் மெனுக்கள் தொடர்பு எண்கள் முகவரிகள் படங்கள் ஆகியவற்றையும் பதிவேற்றினர்.

2011ஆம் ஆண்டு zomato இந்தியாவில் டெல்லி, பெங்களூர்,சென்னை, புனே, அகமதாபாத், ஹைதராபாத் என பல ஊர்களுக்கு விரிவடைந்தது. பின்னர் உணவக பட்டியலுக்கு அப்பால் Zomato 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு விநியோக சேவையை தொடங்கியது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அசுர வேகத்தில் கொண்டு சென்றது.

இரண்டு நபர்களால் தொடங்கப்பட்ட zomato நிறுவனம் இன்று 5000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டிருக்கிறது. Zomato நிறுவனத்தின் நிகர லாபம் 971 கோடி ஆகும். புதிய முயற்சிகள், ஆராய்ச்சிகள் இருந்தால் எந்த முதலீடுமே இல்லாமல் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திருக்கிறார் Zomato நிறுவனத்தின் தலைவர் திபேந்தர் கோயல்.

More in Startup

To Top