#image_title
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவின் மனைவி நடிகை நம்ரதா சிரோத்கரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. தமிழ் சினிமாவில் எப்படி விஜயோ, அதே போல் தான் தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு. இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
இவர் நடித்த பல படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்திருப்பார். அந்த திரைப்படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்ற கூறலாம். அதிலும் முக்கியமானது கில்லி தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் கில்லி திரைப்படம். அதைத் தாண்டி போக்கிரி திரைப்படத்தையும் கூறலாம்.
இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபுவின் மனைவி விஜயுடன் கூட ஒரு படத்தில் நடிக்க இருந்து பின்னர் பாதியில் விலகி விட்டார். இந்த செய்தி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு படத்தில் நடித்த நடிகருக்கு பதிலாக பிறர் நடிப்பது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல்தான் திருமலை திரைப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் தான்.
முதலில் அவரை வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையிலான ஸ்கிரீன் ஸ்பெஷல் சரியாக இல்லாத காரணத்தினால் படத்தின் இயக்குனர் அவரை நீக்கிவிட்டு ஜோதிகாவை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கினார். 1993ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றவர். ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்த இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.
மகேஷ் பாபு நம்ர்தா சிரோத்கரும் இணைந்து வம்சி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப் போக 2005 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது கௌதம் கிருஷ்ணா என்ற மகனும் சித்தாரா என்கின்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை நம்ரதாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரா இது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில், வயலில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம்…
கர்நாடக மாநிலம் பெலாமக்கியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கல்லூரி…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த டேனிஷ் (40) என்ற தொழிலாளி, மகாராஷ்டிராவில் உள்ள வெல்லத் தயாரிப்பு…
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ஜெகதீஷ், 2023-ல் தைவானுக்குத் தனது முனைவர் பட்டப்படிப்பிற்காகச் சென்றபோது, டேட்டிங் செயலி வழியாக ஜோயிங்யிங்…
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 19 வயதான சுமித்ரா என்ற இளம்பெண், மாதவிடாய் காலங்களில்…
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை…