Connect with us

CINEMA

பல கோடியில் பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ள மதுரை முத்து… குடும்பத்துடன் சிம்பிளாக நடந்த கிரஹப்பிரவேசம்… வைரலாகும் போட்டோஸ்…

மதுரை முத்துவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மிகவும் பாப்புலரான ஒருவராக இருந்து வருகிறார்.

   

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். இதைத்தொடர்ந்து தன்னுடைய பட்டிமன்ற பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். இதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு சென்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பல நேரங்களில் இவர் பேச்சும் பேசுங்கள் டைமிங் காமெடியாக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக்கவலையை மறந்து வாய்விட்டு சிரித்து வருகிறார்கள்.

காமெடி நடிகரான மதுரை முத்து லேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

2016ல் கார் விபத்து ஒன்றில் லேகா  உயிரிழந்தார். இவரது மனைவியின் மறைவுக்கு பின்னர் தனது 32 வது வயதில் தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இவர் 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் தனது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் மதுரை முத்து சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டிற்கு ஆடம்பரமில்லாமல் கிரஹப்பிரவேசமும் நடத்தி முடித்துள்ளார் மதுரை முத்து.

இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். மதுரை முத்து கட்டிய பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

Continue Reading

More in CINEMA

To Top