‘வீரம்’ பட சிறுமி யுவினாவின் தாய் ‘சந்திரமுகி’ பட நடிகையா..? இதை யாரும் கவனிக்கலையே…

By Begam on மாசி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்  வீரம். இதில் தமன்னா, பாலா, சமாதானம், நாசர் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

#image_title

வீரம் படத்தில் தமன்னாவின் குடும்பத்தில் ஒருவராக நடித்த சிறுமி தான் யுவினா. இவரை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது ஏவிஎம் நிறுவனம் தான். 2011 வெளியான உறவுக்கு கை கொடுப்போம் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

   
   

#image_title

 

இதைத்தொடர்ந்து ‘வீரம்’ படத்தில் தல அஜித்துடன் நடித்தார். இதில் கயல் என்ற பெயரில் குட்டி பெண்ணாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். ஆனால் இவரின் உண்மையான பெயர் யுவினா. 2008ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

யுவினாவின் அப்பாவின் ஆசையால் தான் இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.  முதன்முதலில் சின்னத்திரையில் கால் பதித்த இவர், வெள்ளித்திரையில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப் பை, மேகா, வீரம்  போன்ற பல படங்களில் நடித்தார். தற்பொழுது இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘சைரன் ‘படத்தில் ஜெயம் ரவியின் மகளாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக பார்த்த யுவினாவா இது இப்படி வளர்ந்துவிட்டாரே என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், யுவினாவின் தாய் தேவி மகேஷ் என்பவரும் ஒரு நடிகை தானாம். குறிப்பாக அவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் விளம்பர படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 200 விளம்பர படங்களில் அவர் நடித்துள்ளாராம்.

இதுமட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகள் யுவினாவுடன் இணைந்து கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பர படங்கள் மட்டுமின்றி திரை படங்களிலும் நடித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்த சந்திரமுகி 2 படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் யுவினாவின் தாய், தேவி மகேஷ் நடித்துள்ளார். இத்தகவல் இணையத்தில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.