தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை ஷாலினி காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் அலைபாயுதே போன்ற படங்களிலும் அடுத்து நடிகர் அஜீத்குமாருடன் அமர்க்களம் என்ற படத்தில் நடித்தார். அப்போது அஜீத்குமாருக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் ஷாலினியுடன் நடித்தபோது நடந்த ஒரு சம்பவம் குறித்து கூறியதாவது, அலைபாயுதே சூட்டிங்கின் போது, நான் அஜீத்தை தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ ரொமான்டிக் சீனில் ஓவரா நடிக்காதே. என் பக்கத்தில் வராமல் தூரமா நில்லு என்று ஷாலினி என்கிட்ட சொன்னாங்க. நானும் ஹே இங்க பாரு. எனக்கும் சரிதாவுடன் திருமணம் நடக்கப் போகுது. நீயும் பக்கத்தில் வராதே என்று காமெடியாக சொன்னேன். ஆனால் ஷாலினி என்கிட்ட சொன்னபோது அது உணர்வுபூர்வமாக இருந்தது என்று நடிகர் மாதவன் கூறியிருக்கிறார்.
