“ரூ.1,000 பிச்சை காசா?”, உழைப்பவர்களுக்கு தான் அந்த அருமை தெரியும்…. அன்புமணியை விளாசிய திமுக அமைச்சர்….!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

கடலூர் திருவந்திபுரம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்ற நிலையில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று கூறுகிறார் பாமக தலைவர் அன்புமணி. உழைப்பவர்களுக்கு தான் அந்த காசியின் அருமை தெரியும். விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பம் முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்ற 12ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அன்று உங்கள் செல்போனை பார்த்துக்கொண்டே இருங்கள்.

அதில் பணம் வந்துவிடும். அன்புமணி ராமதாஸ் மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு ஆயிரம் ரூபாய் என்று கூறி வருகிறார். அந்த ஆயிரம் ரூபாய் கிடைப்பது எவ்வளவு கடினம் என்று உழைக்கின்ற மக்களுக்கு தான் தெரியும். அந்த காசுக்காக தான் தற்போது தந்தையும் மகனும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் கட்சிக்கு கொள்கை கிடையாது, இட ஒதுக்கீடு கிடையாது, பணம் ஒதுக்கீடு தான் நடக்கிறது என்று அமைச்சர் பேசியுள்ளார்.