கடந்த 2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சாமி. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈ ர்த்தவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படமாகும். தொடர்ந்து இவர் தமிழில் குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்தியம், கோ, காத்தாடி என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் ரசிகர்களின் கவனத்தை ஏற்றார். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞரின் என்று பன்முக திறமை கொண்ட இவர் மொத்தம் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். தெலுங்கு திரை உலகில் தனது தனித்துவமான நடிப்பால் சிறப்பு அங்கீகாரத்தை பெற்ற மூத்த நடிகர் இவர்தான். சிறிது காலமாக படங்களிலிருந்து விலகி இருக்கிறார். வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது அவர் நடக்க முடியாமல் தவிப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறுதியாக இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருந்தார்.
அதன் பிறகு அப்படியே வீட்டில் முடங்கி விட்டார். சமீபத்தில் இவர் உடல் எடை மெலிந்து மிகவும் பரிதாப நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் தனது 83 வயதில் தற்போது காலமானார். இவருடைய மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
