இரவோடு இரவாக தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்…!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்ததோடு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி கலர் பிடித்ததாக கூறி தாக்குதல் நடத்தியதோடு மீனவர்களையும் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதும் கைது செய்வதும் வாடிக்கையாக்கிவிட்டது. இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.