பரிதாப நிலையில் விஜய் பட வில்லன் நடிகர்.. ரசிகர்களை உருக்குலைய வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

By Nanthini on ஆனி 12, 2025

Spread the love

கடந்த 2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சாமி. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படமாகும். தொடர்ந்து இவர் தமிழில் குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்தியம், கோ, காத்தாடி என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் ரசிகர்களின் கவனத்தை ஏற்றார்.

மரண வதந்தி.. திருப்பாச்சி பட வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வருத்தம்.. வீடியோ வெளியீடு! | Actor Kota Srinivasa Rao feels for his death hoax - Tamil Filmibeat

   

நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞரின் என்று பன்முக திறமை கொண்ட இவர் மொத்தம் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். தெலுங்கு திரை உலகில் தனது தனித்துவமான நடிப்பால் சிறப்பு அங்கீகாரத்தை பெற்ற மூத்த நடிகர் இவர்தான். சிறிது காலமாக படங்களிலிருந்து விலகி இருக்கிறார்.

   

படம்

 

வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது அவர் நடக்க முடியாமல் தவிப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறுதியாக இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருந்தார். அதன் பிறகு அப்படியே வீட்டில் முடங்கி விட்டார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை எவ்வாறு பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வர இவருக்காக இப்படி ஒரு நிலை என்று ரசிகர்கள் கவலையுடன் கேட்டு வருகிறார்கள்.