சூர்யாவை கழட்டிவிட்டு.. கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் அடுத்த படத்துக்கான ஹீரோவை தட்டி தூக்கிய லோகேஷ் கனகராஜ்..!

By Nanthini on ஆனி 12, 2025

Spread the love

முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கணகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர்கான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ரஜினியின் டிராவல் செய்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அமீர்கான் உடன் லோகேஷ் கனகராஜ் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் பண்ண போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அமீர்கான் வெளிப்படையாக கூறியிருந்தார்.

அட்லீக்கு ஷாருக்கான்னா.. லோகேஷ் கனகராஜ்-க்கு அமீர் கான்..! பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் மாஸ் டைரக்டர்..! - TamilWire

   

மற்ற ஹீரோக்களைப் போல இல்லாமல் பல விஷயங்களையும் அவர் வெளிப்படையாக பேசி வருகின்றார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் பண்ணப் போகிறார்கள். லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் எடுக்கும் போது விஜய் இடம் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டை கூறி இருக்கிறார். ஆனால் இருவரும் சேர்ந்து மாஸ்டர் படத்தை செலக்ட் செய்து முடித்து விட்டனர். தற்போது அமீர்கானுடன் இணைய போவது அந்தப் படம் தானா.

   

சூர்யாக்கு கல்தா கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. கூலி ஸ்பாட்டில் அமீர்கான் உடனான நட்பின் அடுத்த லெவல் - Cinemapettai

 

மேலும் இது சூர்யாவை வைத்து எடுக்க இருந்த இரும்புக்கை மாயாவி படம் தான் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக அமீர்கான் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கி விட்ட நிலையில் கூடிய விரைவில் இதனை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை எடுக்கப் போவதால் இந்த படத்திற்கு அப்படியே ரூட்டை மாற்றிவிட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.