சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் கவின். இவர் நடிப்பில் அடுத்தது வெளியாக இருக்கும் படம் மாஸ்க். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மாஸ்க் பட குழுவினர் தொடர்ந்து புரொமோஷன் நடத்துகிறார்கள். சமீபத்தில் பிரபல கல்லூரி ஒன்றில் படத்தின் பிரமோஷன் நடந்தது. அதில் பேசிய கவின், மதுரையில் தனக்கு நடந்த விபத்து குறித்து பேசி உள்ளார், அதில் 2012 ஆம் ஆண்டு வருடம் மதுரையில் எனக்கு விபத்து ஏற்பட்டது. ஆனால் இன்று நான் உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் மதுரை மக்கள்தான்.
ஒரு சாலை விபத்தில் நான் என்னுடைய நெருங்கிய நண்பர்களை இழந்திருக்கிறேன். அந்த சமயத்தில் மருத்துவர்கள் என்னிடம் சொன்னது ஐந்து நிமிடம் அல்லது 10 நிமிடம் முன் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று. ஆனால் எனக்கு தெரியவில்லை நான் செய்த புண்ணியமா? இல்லை என் பெற்றோர் செய்த புண்ணியமா? அன்று மதுரை மக்கள் தான் என்னை வண்டியில் இருந்து காப்பாற்றி ஆம்புலன்ஸ் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று என் உயிரை காப்பாற்றினார்கள். அவர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.
