BREAKING: வரலாறு காணாத விலை உயர்வு… புதிய உச்சம் தொட்ட முட்டை விலை…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

முட்டை கொள்முதல் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முட்டை விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று 5 காசுகள் அதிகரித்த நிலையில் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோழி தீவன மூலப்பொருட்களின் விலை ஏற்றமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலையில் ஒரு முட்டை 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.