10 மணி நேர விமான பயணம்…! குழந்தை அழுதால் என்ன செய்வது..? அருமையான யோசனையை கண்டுபிடித்த தாய்… நெகிழ்ந்துபோன சக பயணிகள்…!!

By Soundarya on கார்த்திகை 20, 2025

Spread the love

தென்கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் நான்கு மாத குழந்தையுடன் சியோலில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடைய 10 மணி நேரம் நீண்ட விமான பயணத்தின் போது குழந்தை அழலாம் என்று எண்ணி சக பயணிகளை சங்கடப்படுத்தாமல் இருப்பதற்காக அசத்தலான யோசனை ஒன்றை செய்துள்ளார். அதன்படி விமானத்தில் இருந்த சுமார் 200 பயணிகளுக்கும் அந்த தாய் தனிப்பட்ட முறையில் சிறிய பிளாஸ்டிக் பை ஒன்றைக் கொடுத்தார். அதில் மிட்டாய்கள் சுயங்கம் மற்றும் காது செருகிகள்(earphone) போன்றவை இருந்தது. அதோடு பையில் ஒரு   குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அந்த குழந்தையின் சார்பாக எழுதப்பட்டிருந்தது.

அதில் வணக்கம் நான் ஜான் வூ. நான் 4 மாத குழந்தை. இன்று என் அம்மா மற்றும் பாட்டியுடன் என் அத்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அமெரிக்க செல்கிறேன். இது என்னுடைய முதல் விமான பயணம். எனக்கு கொஞ்சம் பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. நான் அழுவது தொந்தரவு செய்வது இயல்பு. அமைதியாக இருக்க முயற்சிப்பேன். ஆனால் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. என் குரல் அதிகமாக இருந்தால் இதை பயன்படுத்துங்கள் .நல்ல பயணம் அமையட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.