சிம்ரனையே வேண்டாம்னு ஒதுக்கிய நடிகர் கருணாஸ்…. என்ன காரணம் சொல்லிருக்கார் பாருங்க…!!

By Soundarya on அக்டோபர் 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் கருணாஸ்.அந்த திரைப்படத்தில் ஒடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் இவருக்கென தனி ஒரு அடையாளமாக மாறிவிட்டது.

#image_title

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி, சிம்புவின் குத்து மற்றும் அஜித் உடன் இணைந்து வில்லன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.அந்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாக ஜொலித்தார்.இப்படி காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   
   

#image_title

 

கருணாஸ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.இவரின் மனைவி கிரேஸ் என்பவரும் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் உள்ளனர்.

#image_title

இவர்களின் மகன் அசுரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கருணாஸ், என்னுடைய முதல் படத்தில் சிம்ரன் ஜோடியாக நடிக்க வந்தபோது அவரையே வேண்டாம்னு சொல்லிட்டேன். சிம்ரனை யாராவது வேணாம்னு சொல்வாங்களா? ஆனா நான் வேணான்னு சொல்லிட்டேன். நம்ம கலரை விட கொஞ்சம் கலரா இருந்தா போதும். மத்தபடி நம்ம கூட நடிக்க சொன்ன சிம்ரன்லாம் ஓடியே போயிடுவாங்க  என்று பேசியுள்ளார்.