ajith

அடப்பாவிங்களா.. போகிற போக்க பாத்தா படம் ரிலீஸ் ஆகாது போலயே… விடாமுயற்சி அப்டேட்டால் அப்செட்டான அஜித் ரசிகர்கள்…

By admin on ஐப்பசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின் புலமும் இல்லாமல் தனது முயற்சியால் தன்னம்பிக்கையால் சினிமாவில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் அஜித்குமார். அஜித் குமாருக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பதற்கு காரணம் அவரது எளிமை ஒரு காரணம்.

   

அஜித் அவர்களுடன் பழகிய எல்லா பிரபலங்களும் மனிதர்களும் அவரை போல் ஒரு நல்ல மனிதரை பார்த்ததில்லை எளிமையான மனிதரை பார்த்ததில்லை தலைக்கணமே இல்லாதவர் என்று கூறுகின்றனர். மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். கார் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் ரேசர் ஆகவும் இருந்திருக்கிறார் அஜித்குமார்.

   

மற்ற நடிகர்களை போல் இல்லாமல் அடுத்தடுத்து படம் பண்ண வேண்டும் என்று அவசரம் இல்லாமல் பொறுமையாக நிதானமாக கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் விரும்பும் படியாக படங்களில் நடித்து வருகிறார் அஜித். அப்படி ஒன்று கடந்த ஆண்டு முதல் அஜித் நடிப்பில் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் ஒரு திரைப்படம் தான் விடாமுயற்சி.

 

இப்போது வரும் அப்போது வரும் என்று அப்டேட்டுக்காக எதிர்பார்த்த நிலையில் இந்த படம் தள்ளிக்கொண்டே தான் போகிறது. தற்போது இன்று மாலை ஆறு முப்பதுக்கு விடா முயற்சி அப்டேட் வரும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்திருந்தது.

அதன்படி அப்டேட் வெளியானது. அதில் என்னவென்றால் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது என்பதுதான். அந்த அப்டேட் வெளியானதை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகுந்த அப்செட் ஆகி இருக்கின்றார்கள். இப்போதைக்கு படம் ரிலீசாகாது போலயே என்று நெடிசன்கள் பேசி வருகின்றனர்.