தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் மற்றும் பாடலாசிரியர் தான் சேரன். மதுரையில் பிறந்து வளர்ந்தவர் சேரன். சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்று சென்னைக்கு குடி பெயர்ந்தார். நடிகராக வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும் சில படங்களில் தயாரிப்பு மேலாளராக வாழ்க்கையை தொடங்கினார் சேரன்.

பின்னர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சேரன். நாட்டாமை மற்றும் சேரன் பாண்டியன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சேரன். பின்னர் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சேரன். அதற்கு அடுத்து வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் சேரன். இவரது படங்கள் அதிகப்படியான மாநில விருதுகளையும் தேசிய விருதுகளையும் வென்று இருக்கிறது. இவரது படங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
சேரன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆட்டோகிராப். இந்த திரைப்படத்தில் சேரன் உடன் இணைந்து கோபிகா சினேகா கன்னிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு மனிதனின் சிறுவயதிலிருந்து தற்போது வரை உள்ள ஞாபகத்தை பின்னோக்கி திரும்பி பார்க்கும் படியாக இந்த ஆட்டோகிராப் படம் அமைந்தது. இந்த படம் மெகா ஹிட் ஆனது.

இந்தத் திரைப்படத்தில் வரும் ஒரு மோட்டிவேஷனான பாடல் தான் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்ற பாடல். இந்த பாடலில் சினேகா நடித்திருப்பார். பாடல் வரிகளை பா விஜய் எழுதியிருப்பார். இந்த பாடல் தேசிய விருதை வென்றது. ஆனால் இந்த பாடலில் ஒரு இலக்கண பிழை இருக்கிறது. அது என்னவென்றால் ஒவ்வொரு என்பது ஒருமை பூக்களுமே என்பது பன்மை. அது இரண்டும் சேர்ந்து வருவது ஒவ்வொரு பூக்களுமே என்பது இலக்கண பிழையாக இருக்கிறது. ஆனாலும் இந்த பிழையையும் தாண்டி அனைவரின் மனதிலும் இந்த பாடல் சென்றதால் தேசிய விருதையே வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
