தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் கருணாஸ். 2001 ஆம் ஆண்டு சூர்யா நடித்த நந்தா திரைப்படம் மூலம் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலேயே காமெடியால் மக்களை ஈர்த்த கருணாஸ் நடிப்பில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார். அதன்படி வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், பாபா மற்றும் பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கருணாஸ் கலக்கி இருப்பார். குறிப்பாக திருடா திருடி மற்றும் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் இவர் பேசிய காமெடி டயலாக் என்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இப்படி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

அந்தப் படங்களும் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று தந்தன. அதன் பிறகு பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு அரசியலில் கருணாஸ் களமிறங்கினார். நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ். அவரும் ஒரு பிரபல நட்சத்திரம் மற்றும் நாட்டுப்புற குத்து பாடல்களுக்கு தயார் போனவர் தான். சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல்கள் இவரையும் மக்களுக்கு அடையாளம் காட்டிய பாடல்களாகும். அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். வருமான உடல் மற்றும் பாய் கட் இதுதான் அவருடைய அடையாளம். நீண்ட காலமாகவே அவர் அப்படித்தான் இருக்கிறார். கருணாஸ் மற்றும் கிரேஸ் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர்.

பாடல்கள் பாடுவதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் சமீபத்தில் தான் அவருடைய மகள் திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கருணாஸ் தனது மனைவி பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் முதன் முதலில் அவர்களை ஒரு கல்லூரியில் தான் சந்தித்தேன். அப்போது கிரேஸ் என்ன எதிரி மாதிரி தான் பார்த்தாங்க. அவங்க மனசுல அவங்களுக்கு மட்டும் தான் நிறைய திறமை இருக்கு என்று ஒரு நினைப்பு.

யாராவது என்னை பத்தி பேசிக் கொண்டிருந்தால் என்ன சும்மா கருணாஸ் கருணாஸ் என்ற சொல்றீங்க அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று கேட்டுவிட்டு பல்பு வாங்கிட்டு போவாங்க. ஒரு நாள் அப்படி தான் மெட்ராஸ் மியூசிக் காலேஜ்ல என்னுடைய நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு கல்ச்சுரல் நடந்தது. அப்போ அதற்கு நடுவராக என்னை அழைத்திருந்தனர்.

அப்போ அங்கு சென்றபோது கிரேஸ் ஒரு ஐந்து பெண்களுடன் சேர்ந்து பூ பூக்கும் ஓசை பாடலை பாடினார். அந்தக் குழுவுக்கு எந்த பரிசுகளை வழங்கப்படவில்லை. உடனே நான் இவ்வளவு பசங்க மத்தில பெண்கள் அஞ்சு பேரு தைரியமா நல்லா பாடி இருக்காங்க அவங்களுக்கு சிறப்பு பரிசு ஏதாவது கொடுக்கலாம் என்று கூறினேன். பிறகு நான் அங்கிருந்து வந்து விட்டேன். என்ன பொறுத்த வரைக்கும் என் மனசு என்ன சொல்லுதோ அது மட்டும் தான் நான் செய்வேன். யாராவது ஏதாவது சொன்னால் அதைக் கேட்டுக்கலாம் ஆனா இறுதி முடிவு உங்களுடையது தான் இருக்க வேண்டும். முதல் நாள் கிரேஸ் சந்திக்கும்போதே என் உள் உணர்வு சொல்லியது. பிறகு தான் இருவரும் சந்தித்து பேசி காதலும் மலர்ந்தது என்று கருணாஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
