தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன.

ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம்.

இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள இயக்குனர் P. வாசு, படப்பிடிப்பில் விஜயகாந்த் எப்பவுமே ஜாலியா தான் இருப்பாரு. கைல கல்ல வச்சிக்கிட்டு தூரத்தில் இருக்கும் ஹீரோயினியை அடிப்பாரு. அவங்க திரும்பி பார்க்கும்போது ஒன்னும் தெரியாதது போல இவர் அமைதியா உட்கார்ந்திருப்பார்.

இவர்தான் இந்த வேலைய பண்ணாருன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. பிறகு அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு நான் சொல்லும் போது குனிந்து அந்த கல்லை எடு என்று கூறிவிட்டு ஹீரோயினியை அடித்து விடுவார். பிறகு அவர் கல்லை எடுத்துக் கொண்டு நிமிரும் போது ஹீரோயின் இடம் அந்த நபரை சிக்க வைத்து விடுவார். இது போன்ற பல வேலைகளை படப்பிடிப்பில் விஜயகாந்த் செய்து கொண்டு அங்கிருக்கும் அனைவரையும் எப்போதுமே ஜாலியாக தான் வைத்திருப்பார் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை வாசு பகிர்ந்துள்ளார்.
