மழைகாலத்தில் வரும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் என்னென்ன…? அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி…?

By Meena on அக்டோபர் 18, 2024

Spread the love

மழைக்காலம் என்றால் பல பேருக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் ரம்மியமான காலம் அது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து மழை பெய்தால் தான் நீர் ஆதாரம் பெருகி தண்ணீர் தட்டுப்பாடு இன்றி மக்கள் வாழ முடியும். இப்படி பலவித நன்மைகள் மழைக்காலத்தில் நடந்தாலும் சில கெட்டவைகளும் நடக்கிறது. அது என்னவென்றால் மழைக்காலத்தில் தான் அதிக அளவு நோய் தொற்றுகள் கிருமிகள் பரவும்.

   

இதனால் பலவித உடல் உபாதைகளுக்கு மக்கள் ஆளாகுவார்கள். டெங்கு மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் இந்த காலத்தில் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தவிர சிறு குழந்தைகளில் இருந்து பெரியோர் வரை அனைவருக்கும் பொதுவாக இந்த மழைக்காலத்தில் வருவது காய்ச்சல் இருமல் ஜலதோஷம் போன்றவைகள் தான். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஜலதோஷம் வந்துவிட்டால் போதும் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தொற்றுநோய் போல அது பரவி அனைவருக்கும் உடல் நலம் சரியில்லாமல் சென்று அதற்கு பிறகு தான் தேறி வருவார்கள்.

   

அதேபோல் மழைக்காலத்தில் அதிகமாக பரவும் முக்கியமான நோய்களில் ஒன்று தோல் சம்பந்தமான பிரச்சனைகள் தான். மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான பிரச்சனைகள் என்னென்ன அதில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இனி பார்ப்போம்.

 

மழை நேரத்தில் வெளியில் செல்லும்போது குடையில்லாமல் சென்று விட்டால் சிலர் நனைந்து விட்டு திரும்பி வருவார்கள். அப்படி மழையில் நனைந்து விட்டு வருவது ஈரத் துணியை துவைத்து காய போட்டு இருந்தாலும் அது சரிவர காயாமல் இருக்கும் போது போட்டு செல்வது பல தோல் சம்பந்தமான பிரச்சினைகளை வரவழைக்கும். இதனால் Fungal இன்பெக்சன் எனப்படும் பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் வெளியில் செல்லும்போது மழை நீரில் நடந்து விட்டு தொடர்ந்து காலில் ஈரம் இருந்து கொண்டே வந்தால் அது சேற்றுப் புண்ணை வர வைக்கும்.

சிறு குழந்தைகளுக்கு இந்த மழைக்காலத்தில் தோல் வறண்டு அலர்ஜி ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் அதற்கான தக்க மருந்துகளை வீட்டிலேயே தயாராக வைத்திருக்க வேண்டும். வெளியில் செல்லும் சென்று மழையில் நனைந்து விட்டு வந்தால் கம்ப்ளீட் ஆக உங்களை துடைத்து உடம்பு முழுவதும் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குள் கொசு வராத அளவுக்கு கொசு வலை போன்றவைகளை மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் கொசுவினால் பல நோய்கள் பரவுகிறது. முடிந்தவரை துணி துவைத்த பிறகு நன்றாக உலர்த்திய துணிகளையே உடுத்துங்கள்.