பருத்திவீரன் தொடங்கி வந்தியத்தேவன் வரை.. 47-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

By Mahalakshmi on வைகாசி 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவருக்கு இன்று பிறந்தநாள். அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ் சினிமாவில் பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்திக். பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானார்.

   

முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்டாக அமைய அடுத்தடுத்து திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, கொம்பன், விருமன், சர்தார், ஜப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

   

குறிப்பாக மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு பெரும் புகழையும் வாங்கி கொடுத்தது . அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து மற்ற கதாபாத்திரங்களை விட பிரபலமாக பேசப்பட்டார். அதற்கு காரணம் அந்த கதாபாத்திரத்திற்கு வந்தியத்தேவன் கொடுத்திருந்த உழைப்பு.

 

கடைசியாக இவர் ராஜமுருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் நடிகர் கார்த்திக் அடுத்ததாக கைதி 2, சர்தார் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் முதல் பாகமும் நல்ல வெற்றியை கொடுத்திருப்பதால் இந்த திரைப்படமும் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்.

நேற்று நடிகர் கார்த்திக் அரவிந்தசாமி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை 2d என்டர்டைன்மெண்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா வெளியிட்டு இருந்தார்கள். இன்று தன்னுடைய 47-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் நடிகர் கார்த்தி. இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் அளவில் சொத்து வைத்திருப்பதாகவும், அவரிடம் எம்எல் 350, மற்றும் ஆடி கார்கள் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகர் கார்த்திக் விளம்பர படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.