ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த சண்டை கலைஞர்.. கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வெளியான வீடியோ..!!

By admin on ஆடி 18, 2024

Spread the love

பி.ஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தி அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் நடித்தார். மேலும் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சமீபத்தில் தான் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

Stuntman falls 20 ft to his death on sets of Karthi's Sardar 2; producers offer condolences - Hindustan Times

   

நேற்று முன்தினம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக சண்டை பயிற்சியாளரான ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததால் அவரது மார்பு மற்றும் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

   

Sardar 2: Stuntman Elumalai dies after falling from 20 feet on Karthi PS Mithran set - India Today

 

அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் உயிரிழந்த ஏழுமலையின் வீட்டிற்கு நடிகர் கார்த்தி சென்றுள்ளார். கார்த்தி கண்ணீருடன் ஏழுமலையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Sardar 2: 'సర్దార్‌2' షూటింగ్‌లో ప్రమాదం.. 20 అడుగుల ఎత్తు నుంచి.. | Stunt Man Dies in Accident at Sardar 2 Movie Sets

அப்போது அருகில் இருப்பவர்கள் கார்த்தி சார் வந்திருக்காரு எழுந்திருச்சு பாரு என கதறி அழுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. பார்ப்பவர்களையும் வீடியோ கண்கலங்க வைக்கிறது. சமூக வலைதளம் மூலமாகவும் ஏராளமானோர் ஏழுமலையின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.