இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இந்த திரைப்படம் லாபமா நஷ்டமா என்பதை பிரபல பத்திரிகையாளர் கூறியிருக்கின்றார்.
2024 ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. ஏனென்றால் இவரது திரைப்படங்கள் என்றாலே அது ரசிகர்களை ஏமாற்றாது என்ற நம்பிக்கை தான். ஆனால் இவரின் சினிமா வாழ்க்கையிலேயே இந்தியன் 2 திரைப்படம் தான் மோசமான விமர்சனங்களை பெற்ற படமாக அமைந்திருக்கின்றது.
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
அது மட்டும் இல்லாமல் இப்படத்தின் நேரம் அதிகமாக இருப்பதால் சமீபத்தில் தான் இப்படத்தின் காட்சிகள் சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையின் இந்தியன் 2 திரைப்படம் நஷ்டம் அடைந்து விட்டது, தோல்வியை சந்தித்து விட்டது என்று பலரும் கூறிவரும் நிலையில் அது உண்மை இல்லை என்றும், தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த திரைப்படம் லாபம் கொடுத்த திரைப்படம் தான் என்று பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.
அவர் அதில் தெரிவித்திருந்ததாவது: “இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய இரண்டு திரைப்படங்களின் மொத்த பட்ஜெட் 500 கோடி ஒரு பாகத்திற்கு 250 கோடி என்று வைத்துக் கொண்டாலும் இதில் 90 சதவீதம் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் எடுத்து விட்டது. அதாவது ஓடிடி உரிமம் 128 கோடி, சாட்டிலைட் உரிமை 68 கோடி இதன் மூலமே கிட்டத்தட்ட 200 கோடி கிடைத்துவிட்டது.
இதன்பிறகு தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தியன் 2 படத்தின் மூலம் வரவேண்டிய தொகை 50 கோடி மட்டுமே. கர்நாடக உரிமைக்கு 15 கோடி விற்பனை ஆகிவிட்டது. இப்படி பார்த்தால் இந்த திரைப்படம் திரையிடுவதற்கு முன்பே போட்ட காசை எடுத்து விட்டது. அதுமட்டுமா தமிழ்நாட்டு உரிமை, கேரளா உரிமை, ஆந்திரா உரிமை, இந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டு உரிமை மற்றும் ஆடியோ உரிமை என்று பல இருக்கின்றது.
இப்படி கணக்கு போட்டால் லைக்கா நிறுவனத்திற்கு இந்தியன் 2 திரைப்படம் லாபகரமான திரைப்படம் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அது மட்டும் இல்லாமல் உலக அளவில் இந்த திரைப்படம் தற்போது வரை 150 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ள வரும் நிலையில் இந்தியன் 2 திரைப்படம் ஒரு லாபமான படமாக தான் லைக்கா நிறுவனத்திற்கு இருக்கின்றது. விமர்சன ரீதியாக வேண்டும் என்றால் இப்படம் தோல்வி படமாக இருக்கலாம்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்