தமிழ் சினிமாவில் மாஸ் என்றாலே ஹீரோ ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு வில்லன்களும் தேர்வார்கள். அந்த திரைப்படத்தை பெரிய அளவில் ஹிட்டாக்க போவதும் வில்லன்களின் கதாபாத்திரம்தான். அதிலும் தமிழ் சினிமாவில் பல வில்லன்கள் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முறுக்கு மீசை தோற்றத்தில் தோன்றிய வில்லன்கள் முதல் தற்போது இருக்கும் ஹைடெக் மாடர்ன் வில்லன்கள் வரை மக்கள் மனதில் ஒரு சில பேர் மட்டும்தான் இடம் பிடித்துள்ளனர். வில்லன் கதாபாத்திரங்களுக்கு துணை கதாபாத்திரங்கள் இடத்தில் நடிக்கும் நடிகர்கள் சில நேரங்களில் பெரிதாக பேசப்படுவதே இல்லை.
வில்லன்களே நினைவில் இல்லாத போது அவர்களுக்கு துணையாக நடிக்கும் நடிகர்கள் மட்டும் எப்படி ஞாபகத்தில் வருவார்கள் என்ற கருத்தும் உள்ளது. அந்த வரிசையில் பல படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரமாக நடித்து தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் கராத்தே ராஜா. இவ சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு பள்ளிகளில் கராத்தே வகுப்பு ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு சினிமாவில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் பள்ளியில் கராத்தே சொல்லித் தரும் பயிற்சியை விட்டுவிட்டு சென்னைக்கு வந்தார்.
பிறகு 2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இதுதான் இவருடைய முதல் படம். இதனைத் தொடர்ந்து விஜயின் கில்லி, கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் மற்றும் போக்கிரி என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயுடன் நடித்த அனுபவம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், விஜய் சார் அன்புக்கு ஒரு கட்டத்துல நான் அடிமையானதுக்கு அப்புறம் அவர் மூலமா எனக்கு போக்கிரி படத்துல நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்துல நடிச்சதால எனக்கு அம்பாசிஸ்ட்டர் கார் விஜய் சார் மூலமா பரிசாக கிடைத்தது.
அந்த காரை எடுத்துக்கிட்டு சென்னையில அழகிய தமிழ் மகன் படத்தில் “எல்லா புகழும் இறைவனுக்கே” பாடல் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நான் அங்க போனேன். அப்போ அவர்கிட்ட இந்த காரை நீங்க ஓட்டி தரணும் என்று சொன்னதும் விஜய் சார் எங்கிட்ட இந்த சாவியை வாங்கிட்டு போய் சாமி கும்பிட்டுட்டு அந்த கார அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்து என்கிட்ட கொடுத்தாரு. அப்போ அங்க அத்தனை பேர் இருந்தாங்க. அன்னைக்கு நடந்தது என்னைக்குமே நான் மறக்க மாட்டேன் அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு என்று கராத்தே ராஜா சமீபத்தில் வைத்த பேட்டியில் விஜய் குறித்து பேசி உள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…
ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க…