கோடியில் புரளும் நடிகர் கமல்… பிக் பாஸ் முதல் சீசனிலிருந்து 7-வது சீசன் வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

By Begam on மார்கழி 11, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆனது 2017 தொடங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் முதலில் இந்நிகழ்ச்சி அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை .ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது.

Kamal Haasan

   

இதைத் தொடர்ந்து தற்போது 6  சீசன்கள் நிறைவடைந்து 7வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் அல்ல ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் ஒளி பரப்பப்படுவது நாம் அறிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு சுவாரசியமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நடிகர் கமலஹாசன் இதை தொகுத்து வழங்கும் விதம் தான்.

   

 

அவரை விட இந்த நிகழ்ச்சியை யாராலும் இவ்வளவு சிறப்பாக தொகுத்து வழங்க முடியாது என ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் இந்த பிக் பாஸ் சீசனில் நடிகர் கமலஹாசன் பிரதீப்புக்கு ரெட் கார்ட் மற்றும் மாயா gang ஆதரிக்கிறார் என பல்வேறு விமர்சனங்களில் சிக்கியுள்ளார். எனவே இவர் அடுத்த சீசன்களை தொகுத்து வழங்க வேண்டாம் எனவும்,  நடிகர் சிம்பு தொகுத்து வழங்க வேண்டும் எனவும் இணையத்தில் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

#image_title

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் வாங்கிய சம்பள விவரங்கள் குறித் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி

1. முதல் சீசனுக்கு ரூ. 10 கோடி,

2. 2-வது சீசனுக்கு ரூ. 25 கோடி,

3. 3-வது சீசனுக்கு ரூ. 45 கோடி,

4. 4-வது சீசனுக்கு ரூ. 50 கோடி,

5. 5-வது சீசனுக்கு ரூ. 70 கோடி,

6. 6-வது சீசனுக்கு ரூ. 75 கோடி,

7. தற்போது நடைபெற்று வரும் 7-வது சீசனுக்கு ரூ. 130 கோடி என நடிகர் கமலஹாசனுக்கு சம்பளமாக வழங்கியுள்ளது விஜய் டிவி.