#image_title
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
#image_title
படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.இந்த நிலையில் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜோமல்லூரி, ஒருநாள் மோகன் லால் அவருடைய மனைவி மற்றும் நான் ஆகிய மூன்று பேரும் விஜயின் வீட்டிற்கு சென்றோம். அங்கு விஜய் அவருடைய மனைவி பிள்ளைங்க எல்லாரும் எங்களை வரவேற்றாங்க. என்ன ஒரு ஆச்சரியம் என்றால் எங்க மூணு பேருக்கு தான் சாப்பாடு போட்டு இருக்கு. மோகன்லால் என்னை பார்த்து விஜய் சாப்பிடலையா என்று கேட்டார் நான் தெரியவில்லை அண்ணே.. வெயிட் பண்ணுங்க பார்ப்போம்.
ஒரு வேலைக்காரன் கூட கிடையாது. ரெண்டு பேரும் பரிமாறுறாங்க. இவரு மோகன்லால் விஜய் சாப்பிடு சாப்பிடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறா.ர் ஆனால் விஜய் சிரித்துக்கொண்டே இருந்தார். அதனால் எனக்கு வருத்தமாக இருந்தது. என்னன்னா ஒரு பெரிய லெஜெண்ட் சொல்றாரு அதற்கு விஜய் obey இல்லாமல் இருக்காருன்னு வருத்தப்பட்டேன். அதுக்கப்புறம் மறுநாள் ஷூட்டிங்கில் கொஞ்சம் தூரம் நின்னுட்டு இருந்தேன். விஜய் என்ன பார்த்தாரு நான் திரும்பிக்கிட்டேன். நான் கோவத்துல இருக்கேன்னு அவர் தெரிஞ்சிருச்சு.
அவர் என்னை கூப்பிட்டு விட்டார் .மெதுவா போனேன். இவ்வளவு தூரம் ஒரு பெரிய மனிதன் வீட்டுக்கு வராரு சாப்பிடு என்று சொல்கிறார். நீங்கள் ஏன் மரியாதை செய்யவில்லை என்று. அதற்கு விஜய் சொன்னார், சிறுவயதில் இருந்து எனக்கு அப்பா கற்றுக் கொடுத்த ஒரு விஷயம் என்னவென்றால் வீட்டிற்கு வந்து யாராவது சாப்பிட்டால் அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு தான் சாப்பிட வேண்டும் என்று பழகிவிட்டார். அதனால் நீங்கள் சாப்பிட்டு பிறகு தானே நான் சாப்பிடுவேன் என்று கூறினார் அதன் பிறகு தான் என்னுடைய மனதே சமாதானமானது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…