மோகன்லால் பேச்சை கேட்காத விஜய்… எனக்கு ரொம்ப வருத்தம்… விஜய்யின் அந்த குணத்தை போட்டுடைத்த பிரபலம்..!

By Soundarya on மார்கழி 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

#image_title

படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.இந்த நிலையில் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜோமல்லூரி, ஒருநாள் மோகன் லால் அவருடைய மனைவி மற்றும் நான் ஆகிய மூன்று பேரும் விஜயின் வீட்டிற்கு சென்றோம். அங்கு விஜய் அவருடைய மனைவி பிள்ளைங்க எல்லாரும்  எங்களை வரவேற்றாங்க. என்ன ஒரு ஆச்சரியம் என்றால் எங்க மூணு பேருக்கு தான் சாப்பாடு போட்டு இருக்கு. மோகன்லால் என்னை பார்த்து விஜய் சாப்பிடலையா என்று கேட்டார் நான் தெரியவில்லை அண்ணே.. வெயிட் பண்ணுங்க பார்ப்போம்.

   
   

Mohanlal shares the reason behind sharing space with Vijay in Jilla movie at Malayalam Bigg boss 6 show | Watch Video: நீங்க தான் வேணும்... மோகன்லாலிடம் விஜய் வைத்த ரிக்வஸ்ட்... 'ஜில்லா' மெமரிஸ்

 

ஒரு வேலைக்காரன் கூட கிடையாது. ரெண்டு பேரும் பரிமாறுறாங்க. இவரு மோகன்லால் விஜய் சாப்பிடு சாப்பிடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறா.ர் ஆனால் விஜய் சிரித்துக்கொண்டே இருந்தார். அதனால் எனக்கு வருத்தமாக இருந்தது. என்னன்னா ஒரு பெரிய லெஜெண்ட் சொல்றாரு  அதற்கு விஜய் obey இல்லாமல் இருக்காருன்னு வருத்தப்பட்டேன். அதுக்கப்புறம் மறுநாள் ஷூட்டிங்கில் கொஞ்சம் தூரம் நின்னுட்டு இருந்தேன். விஜய் என்ன பார்த்தாரு நான் திரும்பிக்கிட்டேன். நான் கோவத்துல இருக்கேன்னு அவர் தெரிஞ்சிருச்சு.

அவர் என்னை கூப்பிட்டு விட்டார் .மெதுவா போனேன். இவ்வளவு தூரம் ஒரு பெரிய மனிதன் வீட்டுக்கு வராரு சாப்பிடு என்று சொல்கிறார். நீங்கள் ஏன் மரியாதை செய்யவில்லை என்று. அதற்கு விஜய் சொன்னார், சிறுவயதில் இருந்து எனக்கு அப்பா கற்றுக் கொடுத்த ஒரு விஷயம் என்னவென்றால் வீட்டிற்கு வந்து யாராவது சாப்பிட்டால் அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு தான் சாப்பிட வேண்டும் என்று பழகிவிட்டார். அதனால் நீங்கள் சாப்பிட்டு பிறகு தானே நான் சாப்பிடுவேன் என்று கூறினார் அதன் பிறகு தான் என்னுடைய மனதே சமாதானமானது.