அதை நம்பி வாழ்க்கையை அழித்துக்கொண்ட “நான் அவன் இல்லை ஜீவன்”.. பிரபலம் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் யுனிவர்சிட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜீவன் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து திருட்டுப் பயலே, நான் அவன் இல்லை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தன. இப்படி சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து சினிமாவில் கலக்கி வந்த ஜீவன் கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க கவிதாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜீவன் குறித்து பலரும் அறியாத தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது தலைவர் 171 திரைப்படத்தில் ஜீவன் நடிக்கிறார் என்ற தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இவரை லோகேஷ் கடகராஜ் எப்படி சமாளிக்க போகிறார் என தெரியவில்லை. ஏனென்றால் மிகப்பெரிய நட்சத்திரமாக வரவேண்டிய ஜீவன் பெரிய இடத்தை தொட முடியாததற்கு ஜோசியம் தான் முக்கிய காரணம். அதாவது ஜோசியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஜீவன் 24 மணி நேரமும் ஜோசியம் பார்த்துக் கொண்டே இருப்பார்.

படப்பிடிப்பு தளத்தில் கூட ஜோசியத்தை பார்க்கக் கூடியவர். இதனாலையே இவருக்கு பல பட வாய்ப்புகள் பறிபோனது. இந்த இயக்குனர் படத்தில் நடித்த கட்டம் சரியாக இருக்காது என பலப்படுத்தி இவர் நடிக்கவில்லை. இறுதியில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. அதனைப் போலவே தலைவர் 171 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஜீவனை ஒப்பந்தம் செய்தார் என்றால் தினம்தோறும் ஜோசியம் பார்த்து விட்டு தான் படப்பிடிப்புக்கே வருவார். இந்த படத்தில் அவர் நடிப்பது உறுதியான தகவலாக இருந்தால் லோகேஷ் கனகராஜ் தான் பாவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Nanthini